How to Secure Your Adsense Account:

2022-ல் உங்களுடைய Google Adsense Account-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எனவே இந்த பதிவை இறுதி வரை கவனமாக படியுங்கள்.
Blogger Tips & Tricks for Beginners
How Google AdSense works:
Google Adsense (AdWords) மூலம் Advertiser’s (விளம்பரதாரர்கள்) மற்றும் Publisher’s (பதிப்பாளர்கள்) ஆகிய இருவருடன் இணைந்து வேலை செய்கிறது.
கூகுளுக்கு விளம்பரதாரர்கள் பணம் செலுத்துகிறார்கள், கூகுள் Publisher’s-களின் இணையதளத்தில் விளம்பரங்களை காண்பித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 68%-யினை Publisher’s-களுக்கு Google Adsense வழங்கும்.
கூகுள் தங்களது விளம்பரதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு பல விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுடன் இயங்கி வருகிறது.இதில் அவ்வப்போது சில மாற்றங்களை செய்து வருகிறது.
Google program policy-யானது Publisher-ன் வலைப்பதிவு அல்லது இணையதளத்துடன் இணங்கவில்லை எனில் விளம்பரதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு உங்களுடைய Adsense கணக்கை முடக்கும்.
நீங்கள் உங்களுடைய இணையதளம் அல்லது வலைப்பதிவை Adsense-க்கு விண்ணப்பிக்க போகிறீர்களா அல்லது ஏற்கனவே AdSense-உடன் இணைந்து உள்ளீர்களா?
நீண்ட காலத்திற்கு Adsense மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால் Adsense Program Policy-களை நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டு, அனைத்து கொள்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
How to keep your AdSense account secure:
Google Adsense Program-ல் பொதுவாக மீறப்படும் சில Policy Violation-களை பார்ப்போம்.
Invalid Clicks:

Invalid Click என்பது ஒரு தேவையில்லாத விளம்பரங்களை ஒருவர் க்ளிக் செய்வது.
உங்களுடைய தளத்தில் காட்டப்படும் விளம்பரங்களை நீங்களே க்ளிக் செய்தாலும் அதுவும் Invalid click கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படும். (இதனால் உங்களுடைய Adsense கணக்கு முடக்கப்படும்)
மேலும் வேறு எதாவது ஒரு குறிப்பிட்ட ஒரே IP Address-ல் இருந்து க்ளிக்ஸ் வந்தாலும் அது நீங்கள் செய்வதாக அல்லது நீங்கள் வேறு யாராவது ஒருவருடைய மொபைலில் இருந்து க்ளிக்ஸ் செய்வதாக தான் Adsense தரப்பில் எடுத்துக் கொள்ளப்படும்.
மென்பொருள் மூலம் Automatic Impression மற்றும் Clicks செய்யப்பட்டால் அதனை கூகுள் கண்டறியும் பட்சத்தில் உங்களுடைய Adsense கணக்கு எந்தவித பாரபட்சமும் இன்றி நீக்கப்படும்.
Encourage Clicks:

உங்களுடைய இணையதளத்தில் விளம்பரங்களுக்கு அருகில் ஏதாவது படம் மூலமாக க்ளிக்ஸ் செய்ய வைப்பது, விளம்பரங்களை க்ளிக் செய்க, இதை க்ளிக் செய்து ஆதரவு கொடுக்கவும் இது போன்ற சொற்களையோ அல்லது Emoji போன்ற எந்தவித செயற்கையாக க்ளிக் செய்ய பயனரை தூண்டக்கூடாது.
இதுவும் Google Adsense Program Policy-க்கு எதிரானது, Google கண்டறியும் பட்சத்தில் உங்களுடைய AdSense account நீக்கப்படும்.
Content Policy:
- Adult Content
- Supported launguage
- Copyright Materials
- Ad placement
- Traffic Source
- Webmaster Quality Guidelines
- Dangerous Content
- Child Sexual Abuse
- Mail-order brides
- Shocking Content
- Animal Cruelty
- Hacked Political material
Adult Content:

ஆபாசமான வார்த்தைகள், Emoji, Images, Videos போன்ற எந்தவிதமான 18+ Content-களுக்கு Google Adsense பொருந்தாது.இது போன்ற இணையதளங்கள் Adsense-ஐ மறந்துவிட வேண்டும்.
Copyright Material:

உங்களுக்கு சொந்தமில்லாத எந்த ஒரு Content, Image, Video, Games, Software, Books, E-book, Music, Movie இவை அனைத்துமே Copyright Material.இவைகளை பயன்படுத்தினால் Copyright Claim செய்யப்பட்டால் Adsense Account Terminate செய்யப்படும்.
மேலும் உங்களுடைய இணையதளத்தில் இருந்து Copyright Material ஐ பதிவிறக்கம் செய்யும் Link கொடுக்கப்பட்டாலும், அதுவும் Google Adsense Program Policy-க்கு எதிரானது.
Supported Language:
AdSense ஒப்புதல் கொடுத்துள்ள மொழிகளில் இருந்தால் மட்டுமே உங்களுக்கு Adsense அனுமதி கிடைக்கும்.Google Adsense Supported Languages
Ad Placement:

Adword விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்களின் ஆர்வத்துக்கு எதிராக தற்செயலான மற்றும் Impression-களை உருவாக்கும் விதத்தில் எந்தவொரு வலைப்பக்கத்தின் HTML-ல் மாற்றத்தினை செய்வது Policy-க்கு எதிரானது.
Traffic Source:

Paid Traffic மூலம் போக்குவரத்து கொண்டு வந்து அதன் மூலம் விளம்பரங்களை க்ளிக் செய்வது AdSense Policy-க்கு எதிரானது.
Webmaster Quality Guidelines:
Webmaster Quality Guidelines என்பது ஒரு செய்தி பல இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.ஆனால் ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள தனித்தன்மை, தனிச்சிறப்பு போன்றவற்றால் மாறுபடும்.
Dangerous Content:
ஒரு குறிப்பிட்ட ஜாதி, மதம், இனம், மொழி, பாலினம், ஒரு தனிநபர் அல்லது ஒரு குழு போன்றவற்றிற்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்துவது.
Child Sexual Abuse:
குழந்தை பாலியல், குழந்தை குற்றங்கள் போன்றவை.
Mail-Order Brides:
மெயில்-ஆர்டர் மணப்பெண்கள், திருமண தரகர்கள், வெளிநாட்டவர்களுக்கு திருமணத்தை ஊக்குவிப்பது.
Shocking Content:

Crime Scene, Accident Image, இரத்தம் சம்மந்தப்பட்டவை.
Animal Cruelty:
விலங்குகளை கொடுமைப்படுத்துவது.(யானை தந்தம், புலி தோல், காண்டாமிருகம் கொம்பு, டால்பின் எண்ணெய்) போன்றவை விற்பனை செய்வது.
Hacked Political material:
அரசியல்வாதிகளின் குறுஞ்செய்தி, Hack செய்யப்பட்ட மின்னஞ்சல், அரசியல்வாதிகளின் கசிந்த மின்னஞ்சல், குறுஞ்செய்தி, கசிந்த தேர்தல் விபரங்கள்