Hosting, best hosting provider

How to Choose Best Hosting Provider in Tamil

Google-ல் அதிகமாக தேடப்படும் ஒரு வார்த்தை Who is best hosting provider என்ற வார்த்தை உள்ளது.இந்த பதிவில் அதற்கான பதிலை பார்க்கலாம்.

What is Hosting in Tamil:

இணையதளத்தில் உள்ள Text, Image, Video, Files, HTML, JavaScript, CSS போன்ற அனைத்துவிதமான கோப்புகளையும் 24/7 × வருடம் முழுவதும் Data-க்களை ஒரு Server-ல் சேகரித்து வைக்கும் இடம் தான் Hosting.

எடுத்துக்காட்டாக ஒரு அரிசி கடை வைக்கிறீர்கள் எனில் அந்த கடையில் அரிசி மூட்டைகளை வைப்பதற்கு தேவைப்படும் இடம் தான் Hosting.மேலும் உங்களுடைய தேவைக்கு ஏற்றார்போல இடத்தின் அளவை தேர்வு செய்வது, உங்களுடைய இணையதளத்தில் எவ்வளவு Visitors வருகிறார்களோ அதற்கு தகுந்த Plan-ஐ வாங்கி கொள்ளலாம்.

விலை குறைவான ஹோஸ்டிங்கை தேர்வு செய்யாதீர்கள் (Don’t Choose Cheap Price Hosting Provider):

இன்றைக்கு ஆன்லைனில் அதிகப்படியான Hosting நிறுவனங்கள் Hosting வழங்கி வருகின்றன.ஆனால் அவற்றில் ஹோஸ்டிங் வாங்குவதற்கு முன்பு அவர்களுடைய விபரங்களை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும்.

விலை குறைவாக இருக்கிறது என்று வாங்கிவிட்டால் பின்பு உங்களுடைய இணையதளத்தில் 50 பதிவுகளை பதிவிட்ட பிறகு அதிகமான வாசிப்பாளர்கள் வரும் பொழுது உங்களின் Website Downtime-க்கு சென்றால், உங்களுடைய இணையதளத்தில் விளம்பரங்கள் தெரியும்பட்சத்தில் அதிகப்படியான வருவாயை இழக்க நேரிடும்.மேலும் இணையதளத்தில் நல்ல Ranking Position-ல் உள்ள பதிவுகள் அதனுடைய Ranking-ஐ இழக்க நேரிடும்.

எனவே முதலில் Hosting Provider-ஐ தேர்வு செய்யும் போதே நல்ல நிறுவனத்திடம் வாங்குவது பின்பு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருக்க வசதியாக இருக்கும்.

Types of Hosting:

Shared Hosting:

இந்த Shared Hosting-ல் ஒரு Server-ஐ பிரித்து 100 நபர்களுக்கு கொடுக்கப்படும்.புதிதாக WordPress website துவங்கும் நபர்கள் இதனை தேர்வு செய்யலாம்.ஆனால் இதில் அதிகமாக Visitors வரும்போது இந்த Plan ஏற்றதாக இருக்காது.

Virtual Private Server (VPS) Hosting:

VPS Hosting என்பது செயல்திறன் மற்றும் தனிப்பயனாக்குதல் என்று வரும்போது Shared Hosting திட்டங்களுக்கு ஒரு படி மேலே இருக்கும்.மேலும் Shared Hosting-ஐ விட சற்று அதிகமாக Visitors களை கையாள முடியும்.

Cloud Hosting:

Cloud Hosting திட்டத்தில் தினமும் 50,000 மேல் Visitors வரும் பட்சத்தில் இந்த Plan-ஐ தேர்ந்தெடுக்கலாம்.இதில் உங்களுடைய File ஒவ்வொரு நாடுகளிலும் சேமித்து வைக்கப்பட்டு அருகில் உள்ள நாடுகளில் இருந்து வாசிப்பாளர்கள் வரும் பொழுது அவர்களுக்கு உங்களுடைய இணையதளம் காட்டப்படும்.

Dedicated Hosting:

இந்த திட்டத்தில் உங்களுக்கென தனியாக ஒரு IP Address வழங்கப்படும்.இதில் அதிகப்படியான Visitor’s களையும் கையாள முடியும்.மேலும் இந்த Plan-ன் விலை மிக அதிகமாக இருக்கும்.

Read Also: How to Connect Domain to Blogger

வெப் ஹோஸ்டிங் வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் (A Few Things to Consider Before Buying Web Hosting Provider):

Bandwidth:

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இணைய இணைப்பில் அனுப்பப்படும் அதிகபட்ச தரவு Bandwidth எனப்படும்.இதன் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.

SSD Storage:

இதன் அளவும் அதிகமாக இருக்க வேண்டும்.

Uptime Guaranty:

ஹோஸ்டிங் நிறுவனத்தால் Uptime guaranty கொடுக்க வேண்டும்.ஏனெனில் உங்களுடைய இணையதளம் அடிக்கடி Downtime செல்லாது.

Customer Support:

24/7*365 நாட்களும் Customer Support Email அல்லது Message வழியாக கொடுக்க வேண்டும்.அப்போது தான் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதனை கேட்டு தீர்வு காண முடியும்.

Read Also: Google Adsense Program Policy

My Opinion:

என்னுடைய 4 ஆண்டுகால Blogging அனுபவத்தில் எனக்கு சிறந்த Hosting வழங்கிய நிறுவனம் Hostinger.மேலும் எனக்கு அதிகமாக SSL Cirtificate இலவசமாக வேண்டும் என்று கேட்டுக்கொண்ட 30 நிமிடங்களுக்குள் எனக்கு இலவசமாக 10 SSL Cirtificate கிடைத்தது.நான்கு ஆண்டுகளில் Hosting-ல் எந்தவித பிரச்சினையும் வந்ததும் இல்லை.

உங்களுக்கு விருப்பமாக இருந்தால் மேலே உள்ள லிங்க் வழியாக சென்று Plan-களை பார்க்கலாம்.

5/5 - (13 votes)

6 thoughts on “How to Choose Best Hosting Provider in Tamil

  1. epdi neenga intha theme meleyum kelayum ad fix panringa..! plzz sollunga..! Footer ku keelayum Header ku melayum epdi ad fix panninga..! plzz solliunga..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x