Blog எழுதிப் பணம் சம்பாதிப்பது (Make Money from Blog) எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் Blog என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Blog என்றால் என்ன? | What is Blog in Tamil?
Blog என்பது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் புதுப்பிக்கப்பட்ட (Update) செய்யப்பட்ட வலைதளம் (website) அல்லது வலைப் பக்கங்கள் (web pages) ஆகும்.
ஒரு தலைப்பில் தொடர்ந்து எழுதப்படும் ப்ளாக் Blogging என்று அழைக்கப்படும்.
Blog எந்த மொழியில் எழுத வேண்டும்? | Blog should be written in which language
ப்ளாக் எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்.ஆனால் நீங்கள் Google Adsense மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் Google Adsense அனுமதி கொடுத்துள்ள மொழிகளில் எழுத வேண்டும்.
Google AdSense Approved Languages
Google தமிழ் மொழிக்கு Adsense அனுமதி கொடுத்து உள்ளதா? | Does Google allow Adsense for the Tamil language?
ஆம். தமிழ் மொழிக்கு கூகுள் ஆட்சென்ஸ் அனுமதி வழங்கி உள்ளது.
2017 க்கு முன்பு வரை தமிழ் மொழிக்கு Google விளம்பர சேவை வழங்கவில்லை.அதனால் தமிழர்கள் ஆங்கில மொழியில் Blogging எழுதி கொண்டிருந்தார்கள்.
2018 பிப்ரவரி மாதம் தமிழ் மொழிக்கு Google Adsense அனுமதி வழங்கியது.அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் Blogger கள் அதிகரிக்க துவங்கி இப்போது 2021 ல் தமிழில் தேடல்கள் அதிகமாகி விட்டது.
பொரும்பாலானோர் ஆங்கில Blog படிப்பதை குறைத்து தமிழ் ப்ளாக்குகளை படிக்க துவங்கிவிட்டனர்.ஆங்கில குறிச்சொற்களை (Keyword) காட்டிலும் தமிழ் குறிச்சொற்கள் தமிழ் Blogger களுக்கு அதிகம் கை கொடுக்கின்றது.
பலர் இன்னும் Blog எழுத ஆங்கிலம் தேவை என நினைத்து நேரத்தை வீணடித்து கொண்டிருக்கின்றனர்.
எனக்கு Blogging பற்றி 2018 ஆம் ஆண்டே தெரியும்.ஆனால் ஆங்கிலம் தெரியவில்லை.மடிக்கணினி இல்லை என்று இரண்டு வருடங்களை வீணடித்து விட்டேன்.
இந்த பதிவை படிக்கும் நீங்கள் இன்னும் Blog எழுத ஆரம்பிக்க வில்லை என்றால் இன்றே உடனடியாக களத்தில் இறங்குங்கள்.
Blog எழுத எந்த வித Investment ம் தேவையில்லை.நீங்கள் முழு நேரமாக வேலை செய்து கொண்டிருந்தாலும் பகுதி நேரமாக (Part time) Blogging எழுதலாம்.
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் செலவு செய்தால் போதும் 3 முதல் 6 மாதங்களுக்குள் உங்களுடைய முதல் ஆன்லைன் வருமானத்தை கூகுள் ஆட்சென்ஸ் மூலம் பெற இயலும்.
முழு நேர வேலையில் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகமாக இதில் அதிகமாக வருமானம் கிடைக்கும். Blogging carrier ஐ ஆரம்பித்து ஓரிரு வருடங்களில் நீங்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு Adsense earnings இருக்கும்.
நான் உங்களை வார்த்தைகளில் ஏமாற்றவில்லை. பல தமிழ் ப்ளாக்கர்கள் (Bloggers) அதிக அளவில் சம்பாரித்து கொண்டு இருக்கிறார்கள்.வெளியில் யாரும் சொல்லி கொள்வது கிடையாது.
Blog ல் எத்தனை பார்வைகளுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? | How much money do you get for how many views on the blog?
இந்தியாவில் இருந்து வரும் 1000 பார்வைகளுக்கு (views) குறைந்தபட்சம் 3 டாலர்கள் வரை கிடைக்கும்.ஆனால் சமூக வலைத்தளங்களில் இருந்து கிடைக்கும் போக்குவரத்துக்கு 3 டாலர்களுக்கு குறைவாகவும் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
அப்படி என்றால் எந்த போக்குவரத்துக்கு 3 டாலர்களுக்கு மேல் கிடைக்கும்.
நாம் பொதுவாக இணையத்தில் Google ல் தேடுபொறியை தான் அதிகமாக தேடுவோம்.கூகுள் தேடுபொறியில் தேடி அதில் வரும் முடிவுகளில் (Results) ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து படிப்போம்.
அவ்வாறு வரும் முடிவுகள் Organic traffic என்று அழைக்கப்படும்.இவ்வாறு Organic ஆக வரும் போக்குவரத்துக்கு அதிக பணம் கிடைக்கும்.மேலும் Keyword களும் இதனை முடிவு செய்யும்.
கீழே உள்ள படிகளை (steps) செய்து உங்களுடைய Blogger website ஐ Adsense பெற செய்யலாம்.
Change your default Blogger dashboard settings
Create Google Search Console and Google Analytics account
Add privacy policy, contact, about, disclaimer pages
Write unique & high quality content (minimum 30 posts)
Google search console என்றால் என்ன? | What is Google search console in Tamil
ப்ளாக்கரில் எழுதிய பதிவுகளை search console ல் சமர்ப்பித்தால் தான் கூகுளின் search engine ல் உங்களுடைய இணையதளம் காண்பிக்கப்படும்.
Google analytics என்றால் என்ன? | What is Google analytics in Tamil
இணையதளத்திற்கு வருபவர்கள் எந்த நாட்டில் இருந்து வருகிறார்கள், எந்த Browser ல் இருந்து பார்க்கிறார்கள், எவ்வளவு நேரம் இருக்கிறார்கள், மொபைலில் இருந்து பார்க்கிறார்களா, அல்லது மடிக்கணினியில் இருந்து பார்க்கிறார்களா, எந்த பதிவை எவ்வளவு நேரம் படிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நமது இணையத்தில் பதிவுகளை எழுத உதவி செய்கிறது.
இதன் மூலம் பார்வையாளர்களின் தேவை அறிந்து அதனை பூர்த்தி செய்து கொடுக்க முடியும்.
6 வழிகளில் ப்ளாக் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் | 6 ways to make money from Blog
- Adnetworks (Google Adsense)
- Affiliate marketing (high profitable)
- Sponsored Post & paid reviews
- Sell your e-books
- Sell your online course
- Online consulting
Read also : பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
Ad networks (Google AdSense)
பெரும்பாலான Blog எழுத்தாளர்கள் (writters) இந்த Adnetwork மூலமாகத்தான் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.இந்த முறையில் வலைப்பதிவுகளில் விளம்பரங்கள் ( Advisement) காட்டப்படும்.
அந்த விளம்பரத்திற்கான பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை எழுத்தாளருக்கு வழங்கப்படும்.
இதில் Google Adsense என்பது கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் விளம்பர சேவை.
Affiliate marketing
Online ல் ஒரு பொருளை (Product) ஊக்குவித்து (Promote) செய்து விற்பனை செய்வது Affiliate marketing என்று அழைக்கப்படும்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருளுக்கு அப்பொருளின் விற்பனையாளர் மூலம் கமிஷன் (Commission) வழங்கப்படும்.
Affiliate marketing மூலம் கிடைக்கும் வருமானம் Adnetwork மூலம் கிடைக்கும் வருமானத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.
உலக அளவில் பல நிறுவனங்கள் Affiliate Marketing சேவையை வழங்கின்றனர்.
இதன் மூலம் அவர்களின் வியாபாரம் பல மடங்கு அதிகரித்து உள்ளது.
Sponsored Post | Paid reviews
உங்களுடைய வலைதளத்தில் Sponsored Post களை பதிவிட்டு அந்த Sponsor களிடம பணம் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு பொருளையோ அல்லது ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளையோ Reviews செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். (அந்த பொருளின் தன்மை மற்றும் தீமைகளை கூறி)
Sell your e-books
நீங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்தவராக (Expert) ஆக இருக்கலாம்.அந்த உங்களுக்கு தெரிந்த விஷயங்களை ஒரு E-Book வடிவில் தயாரித்து அதனை உங்களுடைய வலைதளத்தில் மூலம் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம்.மேலும் அமேசான் Kindle-ல் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்க முடியும்.
Sell your online course
E-Book ல் எழுதியவற்றை ஒரு வீடியோ வடிவில் தயாரித்து அதனை Launch செய்து பணம் சம்பாதிக்கலாம்.
Online Consulting
நீங்கள் Expert ஆக இருக்கும் துறையில் மற்றவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை ஆன்லைன் மூலம் தீர்வு காண்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை Consulting fees ஆக பெற்றுக் கொள்ளலாம். (Ex. Doctor consulting)
Sir,
நான் Blog எழுதி பணம் சம்பாதிக்க விரும்புகிறேன் தாங்கள் நேரிடையான வகுப்பு நடத்தினால் அதனை பற்றி முழு விவரங்களையும் கொடுக்கவும்.
நன்றி
DM for Instagram
8 Ways the Indian Premium League (IPL) Franchises Make Money
Check out these 8 amazing ways in which Indian Premier League (IPL) franchises are making money! From sponsorships to merchandise sales, the business of IPL is booming. Don’t miss out on this exciting read!