
இந்த பதிவில் உங்களுடைய ப்ளாக்கர் அல்லது வேர்ட்பிரஸ் இணையதளத்தை எப்படி Google News Publisher Center-க்கு சமர்ப்பிப்பது என்பதை பார்ப்போம்.
Google News என்றால் என்ன?
கூகுள் செய்திகள் என்பது கூகுள் உருவாக்கிய செய்தி சேகரிப்பு சேவையாகும். ஆயிரக்கணக்கான வெளியீட்டாளர்கள் மற்றும் பத்திரிகைகளிலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுரைகளுக்கான தொடர்ச்சியான இணைப்புகளை இது வழங்குகிறது.
இணையதளத்தை Google News Publisher-ல் சமர்ப்பிப்பதால் என்ன பயன்?
உங்களுடைய இணையதளத்தில் பதிவிடும் பதிவுகள் உடனடியாக Google தேடுதளத்தில் Index செய்யப்படும்.
Google News-ல் அதிகப்படியான Followers வரும்பட்சத்தில் உங்களுடைய பதிவுகள் Google Discover-ல் காண்பிக்கப்படும்.
கூகுள் Discover-க்கு ஒரு பதிவு செல்லும்போது அங்கிருந்து அதிகப்படியான Organic Traffic கிடைக்கும்.
இணையதளத்தை நிறைய நபர்களுக்கு தெரியக்கூடிய அளவுக்கு Brand ஆக மாற்ற முடியும்.
Google News-ல் இருந்து Traffic கிடைத்தால் அதன் மூலம் இணையதளத்திற்கு நல்ல Ranking கிடைக்கும்.
Google செய்திகளுக்கு இணையதளத்தைச் சமர்ப்பிக்க இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
Google News-ல் Submit செய்வதற்கு முன் உங்களுடைய இணையதளம் Google search console மற்றும் Google Analytics-ல் இணைந்திருக்க வேண்டும்.
- முதலில் Google News Publisher Official இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

- பின்பு Add Publication-ஐ Click செய்து Publication Name-ல் இணையதளத்தின் பெயரையும், Primary Website Property-ல் இணையதளத்தின் Url-யும், Location-ல் இணையதளத்தின் Location ஐ கொடுக்க வேண்டும்.

- பிறகு Publication Setting ஐ க்ளிக் செய்து Basic information-ல் உங்களுடைய இணையதளத்தின் பெயர் ஏற்கனவே வந்திருக்கும் அதன் கீழே Primary Language-ல் இணையதளத்தில் எழுதப்படும் மொழியை கொடுக்கவும்.

- Additional Website Property Url-ல் Website Url ஐ உள்ளிடவும்.

- Primary website property Url-ல் உங்களுடைய இணையதளத்தின் Url ஐ கொடுத்து Verify செய்யவும். (Verify செய்ய இணையதளம் ஏற்கனவே Google Search console-ல் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்)
- பிறகு Save செய்து Next கொடுக்க வேண்டும்.

- அடுத்ததாக Visual Style-ல் இணையதளத்தின் Logo எவ்வாறு Google News-ல் தெரிய வேண்டுமோ அந்த Image ஐ JPEG அல்லது PNG Format-ல் குறைந்தபட்சம் 512px by 512px இருக்குமாறு Create செய்து இதில் Upload செய்ய வேண்டும்.

- Rectangular Image குறைந்தபட்சம் 200px by 20px இருக்குமாறு Create செய்து இதில் Upload செய்ய வேண்டும்.(இந்த Rectangular image Optional எனவே இது கட்டாயமாக பதிவேற்ற வேண்டிய அவசியமில்லை) பிறகு Save செய்ய வேண்டும்.

- அடுத்து Google News-ஐ Edit செய்து Basic information-ல் Publication Discription-ல் இணையதளத்தை பற்றி கூற வேண்டும்.
- Publication Category-ல் இணையதளத்தின் Category ஐ கொடுக்கவும்.

- Distribution-ல் Country ஐ Worldwide ஐயுமும், Google Property-ல் Allow All Properties என கொடுக்கவும்.

- Content Section-ல் Section ஐ க்ளிக் செய்து அதில் Feed ஐ க்ளிக் செய்து இணையதளத்தின் Url/Feed என் கொடுக்கவும்.பிறகு Refresh செய்யவும்.

- அடுத்ததாக Review and Publish-ல் Issue ஏதாவதாக இருக்கிறதா என பார்த்து Issue இல்லாவிட்டால் Publish கொடுக்க வேண்டும்.