இந்த பதிவில் உங்களுடைய Adsense கணக்கை முதல் முறையிலே வெற்றிகரமாக எப்படி Verification செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
Why Google Adsense Verification was introduced?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஒரு வரைமுறை யும் இல்லாமல் இருந்தது. இதனால் பலர் அதிகமாக Adsense Account-களை உருவாக்கி வைத்திருந்தனர்.இதனை ஆட்சென்ஸ் அறிந்து ஒருவருக்கு ஒரே ஒரு ஆட்சென்ஸ் அக்கவுண்ட் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று Adsense தரப்பில் நடைமுறை கொண்டுவரப்பட்டது.
அதன் படி ஒருவர் அவருடைய பெயரில் ஒரு Adsense account மட்டுமே வைத்திருக்க வேண்டும்.இரண்டாவதாக ஒரு அக்கவுண்ட் உருவாக்கினால் ID Verification செய்ய முடியாது.மேலும் அதற்கு முன்பே கூகுள் உங்களுடைய பெயரில் ஏற்கனவே அக்கவுண்ட் இருக்கிறது என்று Adsense Apply செய்யும் போது வந்துவிடும்.
Adsense Account Verification Documents:
- India Passport
- PAN card
- Voter ID
- Driver’s license
Adsense தங்களது Verification Documents-ல் Aadhar card-க்கு அனுமதி அளிக்கவில்லை.
Google AdSense Verification in Tamil:
நீங்கள் YouTube channel அல்லது Website இவற்றில் எதை வைத்திருந்தாலும் அதன் மூலம் வருவாய் ஈட்ட ஆட்சென்ஸ் கணக்கு இருக்க வேண்டும்.ஆட்சென்ஸ் இருந்தால் தான் கூகுளில் இருந்து பணம் சம்பாதிக்க முடியும்.
Adsense-ல் 10 டாலர் வந்தவுடன் இது போல ஒரு Mail வரும். You need to verify your identity (கூகுள் ஆட்சென்ஸ் பேமெண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பேமெண்ட்களை பெற உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும்) என்று வந்தவுடன் உங்களுடைய, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தை Adsense-ல் சமர்ப்பிக்க வேண்டும்.
How long does the Google Adsense verification process take (கூகுள் ஆட்சென்ஸ் சரிபார்ப்பு செயல்முறை எவ்வளவு நேரம் ஆகும்)?
ஒரு வருடத்திற்கு முன் ஆட்சென்ஸ் ஆவணங்கள் சரிபார்ப்பு ஒரு சில நாட்கள் ஆனது.ஆனால் தற்போது நீங்கள் சரியாக ஆவணத்தை சமர்ப்பித்தால் உடனடியாக சரிபார்ப்பு செய்யப்படுகிறது.
How to submit the document Exactly (ஆவணத்தை சரியாக எப்படி சமர்ப்பிப்பது):
நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணத்தின் நான்கு மூலைகளும் சரியாக தெரிய வேண்டும்.
ஆவணத்தில் உங்களுடைய விபரங்கள் சரியாக படிக்க கூடியதாக இருக்க வேண்டும்.அவற்றில் எவ்வித (கண்ணை கூசும் வகையில்) பிரதிபலிப்பு இருக்க கூடாது.
இருண்ட மற்றும் மங்களான புகைப்படங்களை கொண்ட ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளபடாது.
முறைகேடுகளை தடுக்க Adsense தரப்பில் 3 முறை மட்டுமே Documents verification செய்ய முடியும்.3 வது முறையும் சரியாக செய்யாவிட்டால் Adsense Account Disable செய்யப்படும்.
How to Verify Your AdSense Account in Tamil:

- Adsense Dashboard-ல் மேலே Pink colour-ல் உள்ள notification-ல் Action Botton-ஐ Click செய்தால் Payments info விற்கு செல்லும்.
- அதில் மேலே (Provide some info about yourself to continue) என்று ஆங்கிலத்தில் இருக்கும்.அதனை க்ளிக் செய்து அடுத்ததாக வரும் பக்கத்தில் கீழே Begin Verification-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.

- அதில் உங்களுடைய ID-ல் உள்ள பெயரை பதிவு செய்து கீழே புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

- பின்பு அடுத்ததாக உங்களுடைய Address-ல் ID யில் உள்ளது போல் கொடுத்து Verification செய்ய வேண்டும்.
- சரியாக செய்த பின்பு ஆட்சென்ஸ் தரப்பில் இருந்து வெற்றிகரமாக ஆவணம் சரிபார்க்கப்பட்டு என்று Mail வரும்.

Important Tips About Google Adsense Verification in Tamil:
ID Verification செய்யும் நபரின் வயது 18 பூர்த்தியாகி இருக்க வேண்டும்.மேலும் கூகுள் Account-ல் உள்ள Date of Birth-ம் ID-ல் உள்ள Date of Birth-ம் சரியாக இருக்க வேண்டும்.
முக்கியமாக நீங்கள் Verification செய்யும் போது கொடுக்கும் Name மற்றும் Address-ம், Adsense Account-ல் உள்ள பெயரும் Address-ம் சரியாக இருக்க வேண்டும்.
மேலும் நீங்கள் சரியான Address கொடுத்தால் தான் Pin Verification சரியாக உங்கள் கையில் கிடைக்கும்.
Nice information
Blogtools
The hard times of women
epdi neenga intha theme meleyum kelayum ad fix panringa..! plzz sollunga..! Footer ku keelayum Header ku melayum epdi ad fix panninga..! plzz solliunga..!
Bro Instagram Vaanga 👉 @tamilbloggerking