Google Adsense Dashboard – ல் மேலே ‘Your payments are hold because you need to verify your address’ என வந்திருக்கும்.
இந்த பதிவில் Google Adsense Address Verification அல்லது Google Adsense Pin Verification எப்படி செய்வது என்பதனை பார்ப்போம்.
Table of Contents
What is Google Adsense Verifications?
முதலில் உங்களுடைய ஆட்சென்ஸ் கணக்கில் 10$ வந்தவுடன் உங்கள் ID-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.அதன் பிறகு முகவரிக்கு வரும் 6 இலக்க PIN-ஐ சமர்ப்பித்தால் Verification முடிந்தது.
Google Adsense PIN Verification?
Adsense – ல் ID Verification சரிபார்ப்பு முடிந்தவுடன் உங்களுடைய முகவரிக்கு Pin அனுப்பப்படும்.இந்த Pin-ஆனது 6 இலக்கங்களை கொண்டிருக்கும்.
Google Adsense Pin எப்படி வரும்?
நீங்கள் ஆட்சென்ஸ் கணக்கில் எந்த முகவரியை கொடுத்துள்ளீர்களோ அந்த முகவரிக்கு தபால் மூலம் Pin அனுப்பப்படும்.இந்த Pin SMS அல்லது Gmail வழியாக அனுப்பப்படாது.
இந்த Pin உங்களுடைய முகவரிக்கு 2 வாரங்களில் இருந்து 4 வாரங்களுக்குள் வந்து விடும்.கூகுள் ஆட்சென்ஸ் Dashboard-ல் எந்த தேதியை குறிப்பிட்டு உள்ளார்களோ அந்த தேதியில் PIN-ஐ உங்களுடைய முகவரிக்கு அனுப்பி விடுவார்கள்.ஆனால் அது தபால் அலுவலகங்களில் தாமதமாகலாம்.
Adsense Pin எப்படி இருக்கும்?
இந்த Letter-ல் எப்படி PIN Verification செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கும்.
இங்கு மேலே தெரியும் படி எனக்கு Google-ல் இருந்து வந்த Pin Verification letter – ஐ வைத்துள்ளேன்.காலப்போக்கில் இந்த Letter – ன் நிறங்கள் மாறலாம்.ஆனால் உள்ளே உங்களுக்கென வந்திருக்கும் Pin எந்தவிதத்திலும் தவறாகாது.
Adsense Pin ஐ வேறு யாரும் பயன்படுத்த முடியுமா?
உங்களுடைய முகவரிக்கு வந்திருக்கும் Pin உங்களுக்கென தனித்துவமானது இதனை யாரும் வேறொரு ஆட்சென்ஸ் கணக்கிற்கு பயன்படுத்த முடியாது…
How to verify your Google Adsense Account with PIN?
உங்களுக்கென வந்திருக்கும் Letter-ல் உள்ள PIN ஐ எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஆட்சென்ஸ் கணக்கில் மேலே காட்டப்படும் Notification – ல் Action, button ஐ க்ளிக் செய்து உள்ளே சென்று Pin Verification செய்யலாம்.
OR…
Adsense Dashboard -ல் வலதுபுறத்தில் உள்ள மூன்று Line – ஐ க்ளிக் செய்து அதில் கீழே இருக்கும் Payments, Option-ல் உள்ள Verification check எனும் Option – ல் சென்று Address verification – ல் உங்களுடைய Pin-ஐ உள்ளீடு செய்யவும்.
உங்களுக்கு ஒரு மாதத்திற்குள் PIN Letter வரவில்லையெனில் என்ன செய்ய வேண்டும்?
உங்களுடைய முகவரிக்கு ஒரு மாதத்திற்குள் PIN Letter வரவில்லையெனில் உங்களுடைய அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று அங்கு உங்களுடைய Address – க்கு வரும் தபால்காரரை அனுகி அவரிடம் Letter வந்துள்ளதா எனவும் வரவில்லை எனில் இதுபோல முகவரிக்கு வரும் போஸ்ட் வந்தால் உங்களுடைய முகவரிக்கு எடுத்து வருமாறு கூறவேண்டும்.
Important:
ஒரு ஆட்சென்ஸ் அக்கவுண்டுக்கு மூன்று அவகாசம் மட்டுமே எனவே PIN ஐ சரியாக கொடுக்கவும்.
ஆங்கிலத்தில் உள்ள கட்டுரையை தமிழில் blogயில் எழுதினால் adsence earn பண்ண முடியுமா? அண்ணா
கொஞ்சம் கட்டுரையில் உங்களுடைய வார்த்தைகளையும் சேர்த்து கட்டுரையை Unique ஆக்குங்கள்…
(Ji evlo amount vantha withdraw panna mudiyum).
100$