தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Image Credits _ UNSPLASH

தினமும் இரண்டு பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்தத்தின் உற்பத்தி அதிகரிக்கும்.

மலச்சிக்கல் ஏற்பட்டால் இரவு தூங்க செல்லும் போது 5 பழங்களை சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும்.

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 5 முதல் 10 பழங்கள் வரை சாப்பிட ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்கும். ஆண்மையை அதிகரிக்கும்.

ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால், அதில் இருக்கும் சத்துக்களால் நீண்ட நேரம் பசியை தாங்கும் சக்தியை கொடுக்கும்.

அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ரத்த அழுத்தத்தைக் (Blood Pressure) கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

தொடர்ந்து அத்திப்பழத்தை சாப்பிடும் ஆண்களின் முகத்தில் சுருக்கங்கள் இருக்காது.

அத்திப்பழத்தை உட்கொண்டால் நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கலாம்.

அத்திப்பழத்தில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.

அத்திப்பழங்களை தின்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு குடலில் தங்கியிருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி குடல் சுத்தமாகி, குடல் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும்.