எளிமையாக ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி?

குழந்தைப்பேறின்மை பிரச்சனையில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் உடல் ஆரோக்கிய குறைபாடுகளை கொண்டிருக்கிறார்கள்.

ஆண்களுக்கான குறைபாட்டில் முக்கியமானது விந்தணுக்களின் வீரியமின்மையும் குறைவான எண்ணிக்கையும் தான்.

ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க தினசரி உட்கொள்ளும் உணவுகளே போதுமானது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலே விந்தணு குறைபாடு வராமல் பார்த்துகொள்ளலாம்.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்பவற்றில் டார்க் சாக்லேட் ஒன்று. இந்த சாக்லேட்டை உருவாக்கும் கொக்கோபீன்ஸ் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது.

விந்தணுக்களின் எண்ணிக்கியை அதிகரிப்பதற்கான சூப்பர் ஃபுட் என்று முட்டைகளை சொல்லலாம். முட்டைகளில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது விந்தணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உணவில் அன்றாட ஒரு வாழைப்பழமும் போதுமானது.  வாழைப்பழத்தில் வைட்டமின்கள் பி 1 மற்றூம் வைட்டமின் சி மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

பூண்டு விந்தணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் அலிசின் விந்தணுக்களின் சரியான பகுதிக்கு இரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கு உதவுகிறது

கீரைகள் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யும் என்று சொல்வார்கள். இது ஆண்களின் விந்தணுக்கள் வீரியத்தையும் ஊக்குவிக்க செய்கிறது.

காய்கறிகளில் கேரட் முக்கியமானது. கேரட் பீட்டா கரோட்டின் நிறைந்த வளமான மூலம். மேலும் இது ஆக்ஸிஜனேற்றியாகும். இது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்கிறது.

பல ஆண்டுகளாகவே ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்க பேரிச்சம்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆம், பேரீச்சம்பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை மேம்படுத்தலாம்.