Different types of insurance, insurance company

What are the different types of insurance | Risks & Benefits

Different types of insurance, insurance company

What are the things to look for when choosing a good insurance company?

ஒரு நல்ல காப்பீடு நிறுவனத்தை தேடும்போது, நீங்கள் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன:

முதலில் அந்த நிறுவனம் புகழ்பெற்ற நிறுவனமா? மற்றும் Claim settlement ratio அதிகமாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.அப்போது தான் நம்முடைய Policy Claim செய்யும் போது திரும்ப கிடைப்பது உறுதி.

மேலும் அந்த நிறுவனம் நல்ல வாடிக்கையாளர் சேவையை கொண்டுள்ளதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

What are the different types of insurance:

பல்வேறு வகையான காப்பீடு உள்ளன.எனவே அனைத்து வகையான காப்பீடுகளையும் பற்றி எழுதினால் உங்களுக்கு குழப்பமாக இருக்கும்.எனவே மிகவும் பொதுவான 6 வகை காப்பீடுகளை பற்றி பார்க்கலாம்.அவை:

Health insurance (மருத்துவ காப்பீடு):

பாலிசிதாரருக்கு (Policy holder) ஏற்படும் மருத்துவ செலவுகளை இந்த காப்பீடு மூலம் பெற்று சரிசெய்து கொள்ளலாம்.இது ஒரு அரசாங்கம் அல்லது தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும்.

Life Insurance (ஆயுள் காப்பீடு):

பாலிசிதாரருக்கு மரணம் ஏற்பட்டால் இந்த வகையான காப்பீடு அவரது குடும்பத்தினருக்கு அல்லது அவர் யாருடைய பெயரில் Nomination செய்துள்ளாரோ அவருக்கு நிதி பாதுகாப்பை வழங்கும்.இது இறுதிச் செலவுகள் மற்றும் பிற செலவுகளை ஈடுகட்ட உதவும்.

Disability insurance (இயலாமை காப்பீடு):

விபத்து அல்லது நோய் காரணமாக பாலிசிதாரர் வேலை செய்ய முடியாமல் போனால் இந்த காப்பீடு அவரது வருமானத்தை மாற்றி அமைக்கும்.

Homeowners insurance (வீட்டு உரிமையாளர் காப்பீடு):

பாலிசிதாரரின் வீடு மற்றும் உடைமைகளுக்கு சேதம் அல்லது திருட்டு ஏற்பட்டால் இந்த காப்பீடு மூலம் Claim செய்து கொள்ளலாம்.

Auto Insurance (வாகன காப்பீடு):

இந்த காப்பீடு வாகன விபத்தில் ஏற்படும் சேதங்களின் செலவுகளை உள்ளடக்கும்.

Umbrella Insurance (குடை காப்பீடு):

குடை காப்பீடு உங்கள் தற்போதைய வாகனம், வீட்டு உரிமையாளர்கள் அல்லது பிற பாலிசிகளின் வரம்புகளுக்கு அப்பால் கூடுதல் பொறுப்புக் கவரேஜை வழங்குகிறது. காயங்கள் அல்லது சேதங்களுக்கு நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் பிற பாலிசிகள் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்றால் அது செலுத்தப்படும்.

Insurance-ன் வரலாறு!

What are the benefits of having Insurance:

  • எதிர்பாராத காயம், மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் நிதி பாதுகாப்பு.
  • மருத்துவ சேவைக்கான அதிக செலவில் இருந்து பாதுகாப்பு.
  • வேலை இழப்பு அல்லது பிற நிதி நெருக்கடியின் போது ஒரு பாதுகாப்பு.
  • மன அழுத்தம் இல்லாமல் மன நிம்மதியுடன் இருக்கலாம்.

What are some of the common mistakes people make when choosing an insurance company:

காப்பீடு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் போது மக்கள் செய்யும் சில பொதுவான தவறுகளில் ஒன்று.ஆராய்ச்சி செய்யாமல் வாங்குவது.

ஏன் ஒரு காப்பீடு வாங்குவதற்கு முன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்?

ஒவ்வொரு காப்பீடும் ஒரு சில விஷயங்களை உள்ளடக்கும் ஒரு சில விஷயங்களை உள்ளடக்காது.எனவே ஒவ்வொரு திட்டங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

நீங்கள் தேர்வு செய்யும் பாலிசியை நன்றாக படிக்காமல் அதில் கையெழுத்து போட கூடாது.ஒரு பாலிசியை பெறுவதற்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை நன்றாக படிக்க வேண்டும்.Policy எவற்றையெல்லாம் Cover செய்கிறது என்பது உங்களுக்கு தெரிய வேண்டியது அவசியம்.

பாலிசி பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதன் மூலம் திடீரென ஏதாவது ஏற்பட்டால் அதற்கு உங்களுடைய பாலிசியை Claim செய்ய முடியுமா?முடியாதா? என்பது உங்களுக்கு தெரியும்.

பலர் தங்களது காப்பீடு திட்டத்தை விலையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்கின்றனர்.விலை நிச்சயமாக ஒரு காரணியாக இருக்கலாம்.ஆனால் நீங்கள் உறுதி செய்வதற்கு முன் அந்த திட்டத்தின் கவரேஜ் மற்றும் பலன்களை புரிந்து கொள்ள வேண்டும்.

What are the risks and benefits of choosing an insurance company?

Different types of insurance வகைகள் உள்ளன.ஒவ்வொன்றிலும் Benefits மற்றும் Risks-ம் உள்ளன.

எடுத்துக்காட்டாக, விபத்து அல்லது நோய் ஏற்பட்டால் உடல்நலக் காப்பீடு உங்களை பாதுகாக்கும்.ஆனால் அந்த விபத்தினால் ஏற்ப்பட்ட அனைத்து செலவுகளையும் உள்ளடக்காது.

ஆயுள் காப்பீட்டில் பல நன்மைகள் உள்ளது.ஆனால் நீங்கள், ஒரு குடும்பத்துடன் இருந்தால் உங்களுக்கு மரணம் ஏற்பட்டால் நிதி ரீதியாக அவர்களை பாதுகாக்க ஆயுள் காப்பீடு பெறலாம்.

ஆயுள் காப்பீடு விலை உயர்வாக இருந்து நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உங்களை சார்ந்து யாரும் இல்லை எனில் அது தேவையில்லை.

காப்பீடு என்றால் என்ன?

Conclusion:

பாலிசியை எடுக்கும் முன் அந்த திட்டம் சார்ந்த அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்கவும்.

உங்களுக்கு Policy-ல் ஏதேனும் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் உங்களுடைய ஆலோசகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.

x