Google Adsense மூலம் பணம் சம்பாதிக்கும் அனைவரும் அல்லது பணம் சம்பாதிக்க விரும்பும் அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ளகூடிய AdSense Measurement-களை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவை உங்களுடைய நேரத்தை செலவு செய்து படிப்பதன் மூலம் உங்களுடைய AdSense Account – ஐ பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும்.
Table of Contents
What is CPC, CPM, CPA, CTR, RPM in Tamil:
- CPC
- CPM
- CPA
- CTR
- RPM
CPC in Tamil:
CPC = Cost per Click
CPC என்பது ஒரு விளம்பரத்தை Click செய்வது. Google Adsense ல் மிகவும் பிரபலமான மற்றும் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை CPC. ஒருவருடைய YouTube, App மற்றும் Website போன்றவற்றின் வருமானத்தை இதுவே நிர்ணயிக்கும்.
இணையதளங்களில் ஒவ்வொரு Keyword க்கும் வெவ்வேறு அளவுகளில் Advertiser’s களிடம் இருந்து பணம் பெறப்படுகிறது.
Adsense – ல் காட்டப்படும் விளம்பரங்களை Click செய்யும் போது, அந்த விளம்பரத்தை Run செய்யும் விளம்பரதாரரின் இணையதளத்திற்குள் செல்லும் அந்த இணையதளத்தில் அவருக்கு தேவையான செயல்களை செய்ய வைத்து கொள்ள முடியும்.
Also Read: Blogger tips and tricks
CPM in Tamil:
CPM = Cost per Mile (or) Cost per Thousand
CPM ல் உள்ள M என்ற வார்த்தை Roman letter-ல் 1000 த்தை குறிக்குமாம். அதனால் CPM ஆனது Cost per Thousand என்றும் அழைக்கப்படும்.
Adsense-ல் Advertiser களிடம் இருந்து Publisher களுக்கு 1000 விளம்பரங்களை பார்த்தால் எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என்பதை CPM குறிக்கும்.
How to Measure CPM:
CPM = Total amount spent / Total Impressions × 1000
Example:
ஒரு விளம்பரதாரர் $100 க்கு விளம்பரம் செய்கிறார் எனில், 10,000 Impression கள்ள காட்டப்படுகிறது என்றால் Publisher க்கு CPM ஆனது 1000 பார்வைகளுக்கு $10 வழங்கப்படும்.
CPA in Tamil:
Cost per Action (or) Cost per Acquisition
CPA என்பது விளம்பரத்தை Click செய்து Advertiser உடைய இணையதளத்தில் அவருடைய Product ஐ விற்பது, User ஐ Login செய்ய வைப்பது, Download, Insurance போன்ற ஏதேனும் ஒரு Service ஐ விற்பது போன்ற விளம்பரதாரருக்கு பணத்தை பெற செய்ய வைக்கும் Action க்கு CPA என்று அழைக்கப்படும்.
Adsense ல் இருந்து Publisher க்கு அதிக வருமானத்தை கொடுக்கக்கூடியது இந்த CPA.
CTR in Tamil:
CTR = Click through Rate
CTR என்பது எத்தனை Views க்கு எவ்வளவு Click செய்யப்படுகிறது என்பதை அளவீடு செய்ய Google Adsense இதை பயன்படுத்துகிறது. பெரும்பாலான் YouTube மற்றும் Website Owner களுக்கு சவாலாக இருப்பது இந்த CTR தான். ஏன் எனில் முன்பெல்லாம் CTR 15% மேல் அதிகமாகும் போது Adsense Account Disable ஆகிவிடும்.
ஆனால் தற்போது 2022-ல் Google நிறைய மாற்றங்கள் செய்துவிட்டது CTR அதிகமானால் Invalid Traffic ல் வந்த பணத்தை கழித்து விடுகிறார்கள். மேலும் குறிப்பிட்ட நாட்களுக்கு விளம்பரத்தை நிறுத்திவைக்கிறார்கள். வெவ்வேறு Location களில் இருந்து 15% CTR இருந்தால் எந்த வித பிரச்சனையும் வராது.
RPM in Tamil:
RPM = Revenue per Mile (or) Revenue per Thousand
Rpm என்பது இணையதளத்தின் செயல்திறனை அறிந்துகொள்ள இந்த அளவீடு பயன்படுத்தப்படுகிறது.1000 Page views களுக்கு மொத்த வருவாய் எவ்வளவு என்பது RPM-ல் காட்டப்படும்.
CPC மற்றும் CTR ஐ பொருத்து RPM அதிகமாகவும், குறைவாகவும் வரும்.
CPC அதிகமாக இருந்தால் RPM அதிகமாக இருக்கும்.CPC குறைவாக இருந்தால் RPM குறைவாக இருக்கும்.