What is Insurance (காப்பீடு) in Tamil:
காப்பீடு என்பது ஒரு உடன்படிக்கை.இது Policy Holder க்கும் காப்பீடு நிறுவனத்துக்கும் இடையேயான ஒரு உடன்படிக்கை.
எதிர்காலத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ள உருவாக்கப்பட்டது தான் இந்த காப்பீடு (Insurance) ஆகும்.
காப்பீடு உங்களுக்காகவோ, உங்களுடைய குடும்பத்திற்காகவோ, வாகனத்திற்காகவோ, தொழிலுக்காகவோ அல்லது உங்களுடைய உடமைகளுக்காகவோ (Property) இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் 4 நபர்கள் இருப்பதாக எடுத்துக்கொள்வோம்.கணவன் மனைவி இருவர் மற்றும் அவர்களுக்கு இரு குழந்தைகள்.குடும்பம் ஒருவருடைய வருமானத்தில் கீழ் இயங்கி வருகிறது.திடீரென ஒரு நாள் அந்த குடும்ப தலைவர் இறந்து விடுகிறார், அவர் இறப்பதற்கு முன்பு காப்பீடு எடுத்து பிரிமியம் செலுத்தி கொண்டு வந்திருந்தாலோ அல்லது பிரிமியம் செலுத்தி முடித்திருந்தாலோ அந்த Primium முதிர்வு தொகை அவருக்கு பின்பு அவர் குடும்பத்தை வழிநடத்த பேருதவியாக இருக்கும்.
Insurance Meaning in Tamil:
Insurance ன் சரியான தமிழ் சொல் ‘ காப்பீடு‘.
History Of Insurance (காப்பீடு வரலாறு):
காப்பீடு திட்டம் 17-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது.அந்த கால கட்டத்தில் வணிகர்கள் வணிகம் செய்ய கடல் வழியாக கப்பலில் சரக்குகளை எடுத்து செல்லும்போது விபத்து ஏற்பட்டாலோ அல்லது கடல் கொள்ளையர்களால் களவு செய்யப்பட்டாலோ அதனால் ஏற்படும் இழப்பானது மிக அதிகமாக இருந்தது.
இதனால் வணிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள்.அத்திட்டத்தின்படி ஒரு கப்பலில் நான்கு வணிகர்களுடைய சரக்குகளும் கொண்டு செல்லப்படும்.இது போல நான்கு கப்பல்களில் சரக்குகள் கொண்டு செல்லப்படும்.இவ்வாறு கொண்டு செல்லும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் இழப்பானது ஒவ்வொரு வணிகர்களுக்கும் சிறு சிறு இழப்பாக இருக்கும் என்று கொண்டு வரப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்தில் பல நடைமுறை சிக்கல் இருந்ததால் காப்பீடு நிறுவனங்கள் (Insurance Company) கொண்டு வரப்பட்டது.
காப்பீட்டு நிறுவனம் நான்கு வணிகர்களிடத்திலும் சிறு சிறு தொகையை வசூலித்து வைத்துக்கொண்டு எந்த வணிகருக்கு இழப்பு ஏற்பட்டதோ அவருக்கு அந்த தொகை வழங்கப்படும்.
Legal contract:
- Primium
- Policy limit
- Deductibles
- Policy terms
Primium:
Primium என்பது ஒரு காப்பீடு பெறும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த வேண்டும்.பின்பு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் செலுத்த வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் செலுத்துவது காப்பீடு நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும்.
இது ஒவ்வொரு நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
Policy limit:
இழப்பீடு தர அனுமதிக்கும் நிறுவனம் அதற்கான உச்ச வரம்பை (Limit) நிர்ணயிப்பது Policy limit.
Deductibles:
Deductibles என்பது ஒரு காப்பீடு நிறுவனத்திடம் இழப்பீடு கோரும் போது போலியாக யாரேனும் இழப்பீடு கோராமல் இருக்க ஒவ்வொரு இழப்பீடு கோரிக்கைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் பிடித்தம் செய்யப்படும்.
Policy term:
எந்தெந்த விஷயங்களுக்கு காப்பீடு பொருந்தும் , எது எதற்கு பொருந்தாது என்பதை Policy term ல் காப்பீடு நிறுவனங்கள் தெரிவித்து இருக்கும்.நிறுவனங்கள் Policy term ல் குறிப்பிட்ட விஷயங்களை கவனமாக படிக்க வேண்டும்.
One thought on “காப்பீடு என்றால் என்ன? காப்பீடு உருவாக்கப்பட்ட வரலாறு | What is Insurance and History of Insurance in Tamil | Tamil Blogger King”